• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 13, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

தரம் 1 மற்றும் தரம் 5 என்பவற்றுக்கு புதிய கல்வி சீர்திருத்தம்.!

Mathavi by Mathavi
April 21, 2025
in இலங்கை செய்திகள், வவுனியா செய்திகள்
0 0
0
தரம் 1 மற்றும் தரம் 5 என்பவற்றுக்கு புதிய கல்வி சீர்திருத்தம்.!
Share on FacebookShare on Twitter

2026 இல் தரம் 1 மற்றும் தரம் 5 ஆகியவற்றில் புதிய கல்வி சீர்திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், ஆசிரியர்களுக்கான பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளதாக பிரதமரும், கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

வவுனியாவிற்கு விஜயம் செய்த அவர் உக்கிளாங்குளம் சீர்திருத்தம் விளையாட்டு கழக மைதானத்தில் நேற்று (20.04) மாலை இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

ADVERTISEMENT

வடக்கில் நான் சென்ற இடமெல்லாம் மக்கள் தமது அன்பையும் ஆதரவையும் வழங்கினர். உண்மையில் இந்த பயணம் எனது குடும்பத்தாருடன் கூடி மகிழந்தது போல இருப்பதை உணர்கின்றேன். நாட்டின் பொருளாதரத்தை கிராம மட்டத்தில் இருந்து அபிவிருத்தி செய்ய வேண்டும். நாட்டையும் அபிவிருத்தி செய்ய வேண்டும். எங்கள் பிள்ளைகளின் கல்வியை அபிவிருத்தி செய்ய வேண்டும்.
கிராமங்களில் உள்ள சிறிய வீதிகள் திருத்தப்பட வேண்டியிருக்கிறது. இந்த வவுனியா மாவட்டம் பெரிய நகரமாக உள்ளது. அதன் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்ய வேண்டும்.

எதிர்காலத்தில் உல்லாச பிரயாணிகளை இங்கு வரவழைக்க வேண்டிய முறைமையை நாம் உருவாக்குவோம். எனவே, அரசாங்கத்திற்கு பொருத்தமான எங்களுடன் இணைந்து செயற்படக்கூடிய சபைகளை மக்கள் உருவாக்க வேண்டும். அதன் மூலமே கிராமங்களுக்கும் விரைவான அபிவிருத்தியை கொண்டு வரமுடியும்.

கடந்த காலங்களில் தோல்வியடைந்த அரசியல்வாதிகள் தற்போது பயந்து நடுங்கிக் கொண்டிருக்கின்றனர். வழமையாக தாங்கள் கைக்கொண்டது போல மீண்டும் இனவாதத்தை கைகளில் எடுத்துள்ளனர். மக்களிடையே குரோதங்களையும், பிரிவினைகளையும் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். எங்களோடு மக்கள் இணைந்திருப்பது அவர்களுக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

நாங்கள் அவர்களிடம் கேட்கிறோம் பழைய அரசியல் கலாசாரத்தை கைவிட்டு மக்கள் விரும்புகின்ற அரசியல் கலாசாரத்திற்குள் நுழைந்து எங்களுடன் இணைந்து பயணிக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம். கடந்தகால நிலைப்பாடுகள் மாறிவிட்டது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இனவாதத்தை மீண்டும் உருவாக்க நாங்கள் இடமளிக்கப் போவதில்லை. அன்பையும் அரவணைப்பையும் கொண்ட ஒரு நாட்டை உருவாக்குவதே எமது தேவையாக உள்ளது. அது இலகுவான ஒரு விடயமல்ல. காலம் காலமாக பிரிவினையை ஏற்ப்படுத்தி வந்த வடுக்களை போக்குவது கடினமான விடயமே.

ஒவ்வொருவருக்கிடையிலும் இழந்து போன நம்பிக்கையை ஏற்படுத்துவது இலகுவானதல்ல. ஆனால் நாம் நல்ல ஒரு அரசியலை செய்வதற்கான நம்பிக்கையை கொண்டுள்ளோம். உங்கள் பிரச்சினைகளை கேட்பதற்கும் உங்களிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கும் நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம். உங்கள் அனுபவங்களை புரிந்து கொண்டு எங்களை மாற்றி பயணிக்க நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம். அதன் மூலம் நல்ல ஒற்றுமையான ஐக்கியமான நாட்டை எதிர்கால சந்ததிக்கு கையளிக்க வேண்டும்.

எங்களுக்கு செய்வதற்கு பல வேலைத் திட்டங்கள் இருக்கின்றன. இந்த வன்னி பிரதேசத்திற்கு கல்வி எவ்வளவு முக்கியத்துவமானது என்பதை நான் புரிந்து கொண்டுள்ளேன். அரசு என்ற வகையில் நாம் கல்விக்கு முக்கியத்துவம் வழங்குகின்றோம். வடபகுதி மக்கள் கல்விக்கு முக்கியத்துவம் வழங்குபவர்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் வடமாகாணத்தின் கல்வி இன்று பாதிப்படைந்து கீழ் நிலையில் உள்ளது. ஆசிரியர் பற்றாக்குறை, வளப்பற்றாக்குறை என்பன நாடு முழுவதும் இருந்தாலும் வடக்கில் கூடுதலாக உள்ளது.

சிறுவர்கள் பாடசாலை கல்வியில் அலட்சியமான போக்கை கடைப்பிடிக்கின்றமை வேதனையான விடயமாக உள்ளது. போதைப்பொருள் பாவனை வியாபித்துள்ளது. இதில் மிகுந்த கவனத்தை நாம் செலுத்த வேண்டும்.

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டில் நாம் புதிய கல்வி சீர்திருத்தம் ஒன்றை ஆரம்பிக்க இருக்கின்றோம். தரம் 1 மற்றும் தரம் 5 என்பவற்றில் அந்த மாற்றங்களை கொண்டு வரவுள்ளோம். மே மாதத்தில் இருந்து அந்த மாற்றங்கள் தொடர்பில் அதிபர் ஆசிரியர்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளோம். ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்க எதிர்பார்த்துள்ளோம். கல்வியியல் கல்லூரிகளை விருத்தி செய்து அதில் உள்ள குறைபாடுகளை தீர்ப்பதற்கு நிதி ஒதுக்கியுள்ளோம்.

ஆசிரியர் பற்றாக்குறையை தற்காலிகமாக நிவர்த்தி செய்வதற்கு தொழில்நுட்ப ரீதியான விடயங்களை உள்ளடக்க எதிர்பார்த்துள்ளோம். இதற்காக உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் கேட்டு நிற்கின்றோம்.

மக்கள் எதிர்பார்க்கின்ற சமாதானத்துடனும் ஒற்றுமையுடனும் அனைத்து சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அபிவிருத்தி அடைந்த ஒரு நாட்டை கையளிப்பதற்கு நாங்கள் அனைவரும் தயாராக வேண்டும். அதற்கு ஊழலற்ற சபைகளை உருவாக்க வேண்டும். ஊழல் நிறைந்ந சபைகளுக்கு நிதிகளை ஒதுக்குவது கடினமான விடயம். இதனை நீங்கள் புரிந்து காெள்ள வேண்டும். மத்தியில் இருக்கும் அரசாங்கம் உள்ளூராட்சி சபை அதிகாரங்களையும் காெண்டிருக்கும் பாேது அபிவிருத்தியை இலகுவாக காெண்டு செல்லலாம். நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதற்கு இன, மத பேதமற்ற தேசிய மக்கள் சக்தியின் கரங்களை பலப்படுத்துங்கள் என்றார்.

Mathavi

Mathavi

Related Posts

மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற தேசிய வெசாக் வார நிகழ்வு..!

மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற தேசிய வெசாக் வார நிகழ்வு..!

by Thamil
May 12, 2025
0

தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் இன்று மாலை பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் பொதுமக்களின் வருகை காரணமாக நகருக்குள் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டன. மட்டக்களப்பு தலைமையக...

புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற வெசாக் தினக் கொண்டாட்டம்..!

புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற வெசாக் தினக் கொண்டாட்டம்..!

by Thamil
May 12, 2025
0

கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் பெறல் மற்றும் பரிநிர்வானத்தை நினைவு கூரும் உலக பௌத்தர்களின் புனிதமான நாளான வெசாக் தினம் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டிருந்தது....

இராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு..!

இராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு..!

by Thamil
May 12, 2025
0

பலாலி இராணுவ முகாமில் பணிபுரிந்து வந்த இராணுவ சிவில் விவசாய உத்தியோகத்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கண்டி - முறுத்தலை பகுதியைச் சேர்ந்த விதுர சஞ்சீவ மதுரட்ட...

சற்றுமுன் தென்னிலங்கையில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளது பேரூந்தின் மீது தாக்குதல்..!

சற்றுமுன் தென்னிலங்கையில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளது பேரூந்தின் மீது தாக்குதல்..!

by Thamil
May 12, 2025
0

யாழ்ப்பாணத்தில் தென்னிலங்கை சுற்றுலா பயணிகளின் பேரூந்து மீது இன்றைய தினம் திங்கட்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். வேலணை...

யாழில் ஊசி மூலம் ஹெரோயினை உட்செலுத்திய இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு..!

யாழில் ஊசி மூலம் ஹெரோயினை உட்செலுத்திய இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு..!

by Thamil
May 12, 2025
0

யாழில் ஊசி மூலம் ஹெரோயினை செலுத்திய இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி, மட்டுவில் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் ரொபின்சன் (வயது 27) என்ற ஒரு...

இன அழிப்பு வாரம் நிகழ்வினை புகைப்படம் எடுத்த பொலிஸுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

இன அழிப்பு வாரம் நிகழ்வினை புகைப்படம் எடுத்த பொலிஸுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

by Thamil
May 12, 2025
0

மட்டக்களப்பில் இன அழிப்பு வாரம் நிகழ்வு இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அங்குவந்து மக்களை அச்சுறுத்தும் வகையில் சீருடையில் மக்களை புகைப்படம், வீடியோ எடுத்த பொலிஸ் உத்தியோகத்தர்...

போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கைது..!

போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கைது..!

by Thamil
May 12, 2025
0

தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து இலங்கைக்கு வந்த பிரிட்டிஷ் பெண் ஒருவரால் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட குஷ் என்ற போதைப்பொருளின் ஒரு தொகுதியை சுங்க அதிகாரிகள் பறிமுதல்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணத்தை கொள்ளையிட்ட ஒருவர் கைது..!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணத்தை கொள்ளையிட்ட ஒருவர் கைது..!

by Thamil
May 12, 2025
0

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணி ஒருவரிடமிருந்து பறக்கும் விமானத்தில் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய சீனாவை சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான...

தேசிய மக்கள் சக்திக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்..!

தேசிய மக்கள் சக்திக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்..!

by Thamil
May 12, 2025
0

"அனைத்து அரசியல் கட்சிகளையும் திருடர்கள் என தெரிவித்த தேசிய மக்கள் சக்திக்கு எதிராக உள்ளூராட்சி மன்றங்களில் கட்சி சார்பற்று ஆட்சியமைக்க, அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்" என...

Load More
Next Post
துப்பாக்கியை காட்டி மிரட்டிய வனவள திணைக்கள அதிகாரி.!

துப்பாக்கியை காட்டி மிரட்டிய வனவள திணைக்கள அதிகாரி.!

பவுண்டரியை தடுத்த பீல்டர்.. ஓடியே 4 ரன்கள் எடுத்த விராட்

பவுண்டரியை தடுத்த பீல்டர்.. ஓடியே 4 ரன்கள் எடுத்த விராட்

சட்டவிரோத கடற்றொழிலை தடைசெய்ய முன்னின்றவரின் உந்துருளி எரிப்பு; நாடாளுமன்றில் குரல்கொடுப்பேன்.!

சட்டவிரோத கடற்றொழிலை தடைசெய்ய முன்னின்றவரின் உந்துருளி எரிப்பு; நாடாளுமன்றில் குரல்கொடுப்பேன்.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி