ஹெரோயினுக்கு அடிமையானவரை கந்தக்காடு போதைபொருள் புனர்வாழ்வு மையத்தில் இணைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
நேற்று முன்தினம் மானிப்பாய் ஆனந்தா வீதியை சேர்ந்த 26 வயதான இளைஞரை மானிப்பாய் பொலிஸார் 15 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்தனர்.
ADVERTISEMENT
இந்நிலையில் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரம் அவர் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரியவந்தது.
சந்தேகநபரையும் சான்றுப் பொருளையும் பொலிசார் மன்றில் முற்படுத்திய பொழுது சந்தேகநபரை கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்திற்கு இணைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.