உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரானது 3 ஆண்டுகளை கடந்து தொடர்ந்து வருகிறது.இந்நிலையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, ரஷ்யா 30 மணிநேர போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை அறிவித்து இருந்தது. இதன்படி, தாக்குதலுக்கு தற்காலிக தடை விதித்து இருந்தது.
இந்நிலையில், போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே இரவில் 48 ஆளில்லா விமானங்களைக் கொண்டு உக்ரைன் தாக்குதல் நடத்தியது என ரஷ்ய வெளிவிவகார அமைச்சரகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
இதுபற்றி வெளியான எக்ஸ் பதிவில், ரஷய பாதுகாப்பு அமைச்சரகம் குறிப்பிடும் போது கிரீமியா பகுதி உள்பட ரஷ்ய நிலைகளை இலக்காக கொண்டு துப்பாக்கிகள் மற்றும் சிறிய ரக பீரங்கிகளால் 444 முறை உக்ரை படைகள் தாக்கின என தெரிவித்துள்ளது.
ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுத படைகளின் தலைமை தளபதியின் உத்தரவின்படி, சிறப்பு இராணுவ செயல் மண்டலத்தில் குவிக்கப்பட்டு உள்ள அனைத்து படை குழுவினரும், ஏப்ரல் 19ஆந் திகதி மாலை 6 மணியில் இருந்து போர்நிறுத்த ஒப்பந்தத்தினை கடைப்பிடித்து வருகின்றனர்
இந்த சூழலில், எல்லை பகுதிகளான பிரையான்ஸ்க், குர்ஸ்க் மற்றும் பெல்கர உள்ளிட்ட மண்டலங்களில் எதிரி படையினர் தாக்குதல்களை நடத்தினர். இதில் பொதுமக்களில் பலர் பலியானார்கள் காயமும் அடைந்துள்ளனர் என ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எத்தனை பேர் பாதிப்புக்கு ஆளானார்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
ஈஸ்ரரை முன்னிட்டு 30 மணிநேர போர்நிறுத்தி ஒப்பந்தத்திற்கு இடையே, ரஷ்ய படையினர் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன என்று உக்ரைன் ஜனாதிபதி ஸெலன்ஸ் குற்றச்சாட்டு தெரிவித்து இருந்த நிலையில் ரஷ்யா இதனை தெரிவித்துள்ளது.