சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் பல குற்றச் செயல்கள், கொலைகள், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் உள்ளிட்டவற்றுடன் தொடர்புடையவர் எனக் கூறி சமீபத்தில் கைது செய்யப்பட்டு தற்போது தடுப்பு காவலில் உள்ளார்.
இந்நிலையில், பிள்ளையான் குழுவைச் சேர்ந்த முக்கிய குற்றவாளிகள் இருவர் கொழும்பு குற்ற தடுப்பு பிரிவினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கிடைத்த தகவல்களின் படி, அரச சாட்சியாக மாறியுள்ள குகன் என்பவர், பிள்ளையானிடம் பெருந்தொகையான ஆயுதங்கள் இருப்பதாக தகவல் வழங்கியுள்ளார்.
அதன்படி, இன்று பிள்ளையான் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையின் போது பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.