கிழக்கு பல்கலை கழக துணைவேந்தர் திரு சுப்பிரமணியம் ரவீந்ரநாத்தினை கொழும்பு பௌத்தாலோக மாவத்தை பகுதியில் வைத்து கடத்தி கொலைசெய்த குற்றச்சாட்டில் முன்நாள் முதலமைச்சர் பிள்ளையான் கைதுசெய்யப்பட்டு அவரிடமிருந்த பெறப்பட்ட குற்ற ஒப்புதலின் படி அவருக்கு உடந்தையாக செயற்பட்ட பலர் குற்றப்புலனாய்வு அதிகாரிகளின் கண்காணிப்பு வளையத்திற்குள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.
இந்த கைதினை தமிழ்மக்கள் விடுதலை கட்சியின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் அவருடன் கொலை கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட ஒட்டுகுழுவினரும் இது கிழக்கு தமிழ் தலமையை திட்டமிட்டு அழிக்கும் செயல்பாடு என பிரச்சாரம் செய்தாலும் பிள்ளையானின் வாக்குமூலம் மற்றும் அரச சாட்சிகளாக மாறி இரகசிய தகவல்களை CID இனரிற்கு வழங்கும் முன்னாள் ஒட்டுகுழு உறுப்பினர்கள் மற்றும் பிள்ளையானின் நெருங்கிய சகாக்களின் தகவல்களின் மூலம் இது அரசியல் பழிவாங்கல் அல்ல மாறாக நீண்ட நெடுங்காலமாக மறுக்கப்பட்டு மறந்து போன நீதியின் தேடல் இது என உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
பிள்ளையானின் கொலைபட்டியல் என்பது மிகப்பெரும் ஆச்சரியத்துடன் கூடிய அதிர்வலைகளை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது என்பதில் ஆச்சரியம் இல்லை ஏனெனில் சிங்கள அரசியல் வாதிகளால் ( மகிந்த குடும்பம்)பிள்ளையான் கருணா போன்றோர் இலங்கை நாட்டின் ஒருமைப்பாட்டை விரும்பும் அதே நேரம் பிரிவினைவாத விடுதலை புலிகளை தோற்கடித்து நாட்டை ஒன்றிணைக்க முன்வந்த நாட்டுபற்றாளர்களாகவே முன்னிலை படுத்தி வந்தனர்.
ஆனால் அம்பாறை முதல் பொலன்நறுவை வரையும் மற்றும் கொழும்பு போன்ற பெருநகர பகுதியில் வாழ்ந்த தமிழ் , சிங்கள , முஸ்லிம் மக்கள் இந்த கூலிபடையினரின் அக்கிரமங்களை அனுபவித்தவர்கள், கண்டவர்கள், கேட்டறிந்தவர்கள் ஆகையினால் பிள்ளையான் மேல் சாட்டப்படும் குற்றச்சாட்டை சந்தேக நபர் என்ற அடிப்படையில் பார்க்காமல் அவரேதான் அந்த கொலைகளின் பிரதான நெறியாளர் என்பதை அனுபவித்து அறிந்து உணர்ந்தவர்கள் ஆகையினால் என்றோ ஒருநாள் இந்த கொலையாளிகளுக்கான தண்டனையானது தாம் வாழும் காலத்தில் கிடைக்கவேண்டும் என பிரார்தனையுடன் காத்திருந்தவர்கள். ஆகையினால் இது அவர்களுக்கு ஆச்சரியமல்ல ஆனந்தமே!
சில நாட்களாக மட்டக்களப்பு நகரை சுற்றி புலன் விசாரணையை மேற்கொண்டுள்ள கொழும்பில் இருந்து வருகை தந்திருக்கும் விசேட குற்றப்புலனாய்வு துறையினருக்கு பல தரப்பினரும் வாக்குமூலம் வழங்கி கொண்டிருக்கின்றனர். உங்களுக்கான மறுக்கப்பட்ட நீதி கிடைக்கவேண்டும் உங்கள் உறவுகளுகளின் ஆத்மா சாந்தியடையவேண்டுமானால் எந்த வித பயமோ பதற்றமோ இன்றி உங்களுக்கு ஏற்பட்ட அநீதிகளை தெரிவித்து சட்டத்திற்கு முன் அந்த குற்றவாளிகளை முன்னிறுத்த முன்வரவேண்டும்.
கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை ஏனைய தமிழ் அரசியல்வாதிகளை விட பிள்ளையானால் சில அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளபட்டது என்பது சிலர் பார்வையில் உண்மையாக தோன்றலாம் ஆனால் இந்த அபிவிருத்திகள் என்பது உங்கள் உறவுகளின் இரத்தத்தை உங்களை வைத்தே கழுவ செய்யப்பட்ட தந்திரோபாய நடவடிக்கை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
கிழக்கு மாகணத்தையும் அதை அண்டிய பகுதிகளில் 2004- 2010 பிள்ளையான்/மற்றும் கருணா குழுவினரின் ஒட்டுகுழு முகாம்கள் இருந்ததை அங்கு வாழ்ந்த ஒவ்வொருவரும் அறிவர். அந்த காலத்தில் இந்த ஒட்டு குழுவால் கடத்தப்பட்ட வர்களின் மொத்த தொகையை கணக்கெடுத்தால் 3 தசாப்த காலத்தில் சிங்கள இராணுவத்தால் கடத்திய காணாமல் ஆக்கி கொல்லப்பட்டவர்கள் சிறு துளியே!
2004 ஆண்டு முதல் பொலன்னநறுவை மாவட்டத்தில் உள்ள தீவுச்சேனையிலயே பிள்ளையானின் மிகபெரும் வதை முகாம் இயங்கிவந்தது.அந்த முகாம் இலங்கை புலனாய்வு துறை பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்த வித்தாரணவின் பூரண வழிகாட்டலிலும் பிள்ளையானில் நெறிப்படுத்தலிலும் பிள்ளையான் குழுவின் 5 ம் நிலை தலைவராக அறியப்படும் மங்களம் மாஸ்ரர் என்பவரின் தலைமையிலே இந்த வதை முகாம் செயற்பட்டு வந்தது . இந்த முகாம்என்பது ரணில் விக்கிரமசிங்கவின் வட்டலந்தை வதை முகாம் போன்று சிறியது அல்ல என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்
இந்த வதைமுகாம் என்பது இலங்கையில் கடத்தப்பட்ட பல ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள், வர்த்தகர்கள், சாதாரண பொதுமக்கள் என பல தரப்பட்ட மக்களையும் கொன்றுபுதைக்க பயன்படுத்தப்பட்டுவந்தது. இந்த முகாம் பற்றி சர்வதேச மன்னிப்பு சபையிலும் முறைப்பாடு பதியப்பட்டிருந்ததுடன் அவர்களும் அதை பற்றி வெளிபடுத்தி இருந்தனர். விசாரணையினையும் கோரியிருந்தனர்.ஆனாலும் மகிந்த /ரணில்/ மைத்ரி அரசுகளால் இந்த வதைமுகாம் பற்றியோ, ஒட்டுகுழுக்கள் பன்றியோ எந்த விசரணையுமின்றி மூடிமறைத்திருந்தனர்., ஏனெனில் பிள்ளையான் மற்றும் கருணா போன்ற தன்னினம் உண்ணும் இந்த வேட்டை நாய்களுக்கு எலும்புத்துண்டு வீசி வழர்த்தவர்கள் இவர்களே என்பதனால் அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது ஆச்சரியமானது அல்ல.
பிள்ளையானின் மிகபெரிய கொலை /ஆட்கடத்தல் /கப்பம் பெறுதல் என பல குற்ச்செயல்களிற்கு உடந்தையாக இருந்த குகன் (தாழங்குடா) CID இனரிடம் சாட்சியாக மாறி வெலிக்கந்தை தீவுசேனை முகாம் பற்றிய பல திடுக்கிடும் உண்மைகளை கூறி மேலதிக தகவல்களிற்காக கொழும்பு குற்றப்புலனாய்வு திணைகளத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இன்று ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்ட பிள்ளையானால் மேற்கொண்ட பிரபல்யமான கொலைகளான ஜோசப் பர்ராஜசிங்கம், சந்திரநேரு,ரவிந்ரதாத், தினூசியா,வர்ஷா,என்று ஒரு சில கொலைகள் பற்றியே பேசப்படுகின்றன . ஆனால் இந்த கொலைகள் பிள்ளையானின் பட்டியலை ஆராய்ந்தால் மிக சொற்பமானவையே! தெரிந்தது ஒண்றிரண்டு தெரிந்தும் தெரியாமல் கடந்து போனது பலநூறு
பிள்ளையானின் கொலைபசிக்கு இரையான மறந்து போன பல உயிர்கள் பற்றி பேசவேண்டும் அவர்களுக்கான நீதி கிடைக்கவேண்டும்.
அந்த உண்மைகள் வெளிவரவேண்டுமாயின் உடனடியாக கருணா கைதுசெய்யபடுவதோடு பிள்ளையானின் குழுதலைவர்களாக செயற்பட்ட ஜெயம(திரவியம்) மார்க்கன், மங்களம் போன்ற ஒட்டுகுழு உறுப்பினர்கள் கைது செய்யபட வேண்டும் அத்துடன் பிள்ளையான் குழுவில் செயல்பட்ட அத்தனை TMVP உறுப்பினர்களும் விசாரிக்கப்பட்டு உண்மைகள் கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி உறுதிப்படுத்தபடவேண்டும்.