1986
இலங்கை, கிழக்கு மாகாணத்தில் கந்தளாய் அணை உடைந்ததில் 120 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர்.
1810
வெனிசுவேலாவின் கரகஸ் ஆளுநர் எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தார்.
1862
லூயி பாஸ்ச்சர், கிளவுட் பெர்னாட் ஆகியோர் தன்னிச்சைப் பிறப்பாக்கம் என்ற கொள்கையை நிராகரிக்கும் பரிசோதனைகளை செய்து முடித்தனர்.
1898
எசுப்பானிய அமெரிக்கப் போர் : அமெரிக்கத் தலைவர் வில்லியம் மெக்கின்லி எசுப்பானியா மீது போரை அறிவிக்கும் அறிவித்தலுக்கு ஒப்புதல் அளித்தார்.
1902
பியேர், மேரி கியூரி ஆகியோர் இரேடியம் குளோரைடைத் தூய்மைப்படுத்தினர்.
1914
ஐக்கிய அமெரிக்காவில் கொலராடோவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தின் போது காவல்துறையினர் தாக்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர்.
1922
சோவியத் அரசு தெற்கு ஒசேத்திய தன்னாட்சி வட்டாரத்தை ஜோர்ஜிய சோவியத் சோசலிசக் குடியரசில் அமைத்தது.
1939
ஹிட்லரின் 50வது பிறந்தநாள் ஜேர்மனியில் தேசிய விடுமுறை நாளாகக் கொண்டாடப்பட்டது.
1945
வடக்கு ஜேர்மனியில் நியூரென்காம் வதை முகாமில் மருத்துவப் பரிசோதனைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட 20 யூத சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
1945
இரண்டாம் உலகப் போர் : அமெரிக்கப் படைகள் ஜேர்மனியின் லைப்சிக் நகரைக் கைப்பற்றினர். ஆனாலும் அடுத்த நாளே இதனை சோவியத் ஒன்றியத்துக்குக் கையளித்தனர்.
1945
இரண்டாம் உலகப் போர் : ஜேர்மனியின் லைப்சிக் நகர முதல்வர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார்.
1945
ஹிட்லர் கடைசித் தடவையாக தனது சுரங்க பதுங்கு இருப்பிடத்தில் இருந்து வெளியே வந்தார்.
1946
உலக நாடுகள் சங்கம் அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டு, அதன் பெரும்பாலான அதிகாரங்கள் ஐக்கிய நாடுகள் அவைக்கு வழங்கப்பட்டன.
1961
பனிப்போர் : கியூபாவில் ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட பன்றிகள் விரிகுடா படையெடுப்பு தோல்வியில் முடிந்தது.
1967
சைப்பிரசில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 126 பேர் உயிரிழந்தனர்.
1968
தென்னாபிரிக்க விமானம் ஒன்று தென்மேற்கு ஆபிரிக்காவில் வீழ்ந்ததில் 122 பேர் உயிரிழந்தனர்.
1972
அப்பல்லோ திட்டம் : யோன் யங் தலைமையில் சென்ற அப்பல்லோ 16 விண்கலம் சந்திரனில் தரையிறங்கியது.
1978
தென் கொரியப் பயணிகள் விமானம் சோவியத் ஒன்றியத்தினால் சுடப்பட்டதில் இரு பயணிகள் கொல்லப்பட்டனர். 107 பேர் தப்பினர்.
1998
கொலம்பியாவில் பொகோட்டா நகரில் ஏர் பிரான்சு போயிங் விமானம் மலை ஒன்றுடன் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 53 பேரும் உயிரிழந்தனர்.
1998
28 ஆண்டுகள் இயங்கிய ஜேர்மனியின் சிவப்பு இராணுவ அமைப்பு என்ற தீவிரவாத அமைப்பு கலைக்கப்பட்டது.
1999
அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் உயர்நிலைப் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
2007
அமெரிக்காவின் இயூஸ்டன் நகரில் உள்ள நாசாவின் விண்வெளி ஆய்வு மையத்தின் பணியாளி ஒருவன் பணயக் கைதி ஒருவரைக் கொன்று தன்னையும் சுட்டுக் கொன்றான்.
2012
பாகிஸ்தான், இஸ்லாமாபாத் நகரில் பன்னாட்டு விமான நிலையத்திற்கு அருகில் குடிமனைகள் உள்ள பகுதியில் விமானம் வீழ்ந்ததில் 127 பேர் உயிரிழந்தனர்.
2013
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 6.6 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 150 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.
2015
சோமாலியா, புந்துலாந்து பகுதியில் ஐ.நா அலுவலகத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 10 பேர் கொல்லப்படனர்.




