1864
அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் வட கரொலைனாவின் பிளைமவுத் நகரத் தாக்குதலை ஆரம்பித்தன.
1895 முதலாம் சீன ஜப்பானியப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தானது. தோற்கடிக்கப்பட்ட சிங் ஆட்சி கொரியா மீதான இறைமையைக் கைவிட்டது. சீனக் குடியரசின் பெங்கியெனின் தெற்குப் பகுதியை ஜப்பானிடம் கொடுத்தது.
1912 ரஷ்யப் படையினர் சைபீரியாவின் வடகிழக்கில் பணிநிறுத்தம் செய்த தங்கச் சுரங்கத் தொழிலாளர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதில் 150 பேர் கொல்லப்பட்டனர்.
1941 இரண்டாம் உலகப் போர்: யுகோசுலாவியப் பேரரசு ஜேர்மனியிடம் சரணடைந்தது.
1945 இரண்டாம் உலகப் போர்: இத்தாலியின் மொண்டீசு நகரம் நாட்சிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.
1946 கடைசி பிரான்சியப் படையினர் சிரியாவில் இருந்து வெளியேறினர்.
1949 அயர்லாந்தின் 26 மாவட்டங்கள் பொதுநலவாய அமைப்பில் இருந்து விலகின.
1961 அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏயினால் பயிற்சியளிக்கப்பட்ட கியூபா அகதிகள் குழு ஒன்று பிடெல் காஸ்ட்ரோவைப் பதவியில் இருந்து அகற்றும் நோக்குடன் விரிகுடாவில் தரையிறங்கியது.
1969 செக்கோசிலவாக்கியாவின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் அலெக்சாண்டர் டூப்செக் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1970 அப்போலோ 13 விண்கப்பல் பழுதடைந்த நிலையில் தனது பயணத்தை இடைநிறுத்தி பூமிக்குத் திரும்பியது.
1971 முஜிபுர் ரகுமான் தலைமையில் வங்காள தேச மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.
1975 கம்போடியாவில் கெமர் ரூச் படைகள் தலைநகர் நோம் பென்னைக் கைப்பற்றின. கம்போடிய அரசு சரணடைந்தது.
1978 ஆப்கானித்தானின் இடதுசாரி அரசியல்வாதி மீர் அக்பர் கைபர் படுகொலை செய்யப்பட்டார்.
1986 போரை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தம் நெதர்லாந்துக்கும் சில்லி தீவுகளுக்கும் இடையில் கைச்சாத்தானது.
2004 இந்தியத் திரைப்பட நடிகை சௌந்தர்யா பெங்களூரில் விமான விபத்தில் இறந்தார்.
2006
டெல் அவீவ் உணவகம் ஒன்றில் பல்லத்தீன தற்கொலைக் குண்டு ஒன்று வெடித்ததில் 11 பேர் கொல்லப்பட்டனர், 70 பேர் காயமடைந்தனர்.
2013
அமெரிக்காவின் டெக்சசு மாநிலத்தில் உரத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் இடம்பெற்ற ஒரு வெடி விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
2014
நாசாவின் கெப்லர் விண்கலம் பிறிதொரு கிரகத்தில் வாழ்தகமைப் பகுதியில் புவிக்கு ஒப்பான கோள் ஒன்று இருப்பதை உறுதிப்படுத்தியது.




