தொற்றா நோய்கள் – NCD குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் ஒரு மனப்பூர்வமான முயற்சியாக, அகில இலங்கை சுதேச மருத்துவ எதிர்கால சேவை சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 2025 ஏப்ரல் 20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை திருகோணமலை கடற்படைத்தள வீதியின் பெரியகடை சந்தை கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள தளம் நிறுவக வளாகத்தில் நடைபெறவுள்ளது
தொற்றா நோய்களைத் தடுத்தல் மற்றும் சிகிச்சையளித்தல் குறித்து சமூகத்திற்கு கற்பிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
“நம்பிக்கையின் ஒரு துளி, வாழ்வின் ஒரு பரிசு” என்ற கருப்பொருளுடன், இந்த இரத்த தானத்தின் உயிர்காக்கும் சக்தியை எடுத்துக்காட்டுகிறது.
இரத்ததானமானது, அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சைகள் மற்றும் கடுமையான நோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் ஒரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும்.
இதில் கலந்துகொள்ளுமாறு அனைத்து பொதுமக்களும் அழைக்கப்படுகின்றார்கள்
மேலும் தகவலுக்கு, அனைத்திலங்கை வருங்கால சுதேச மருத்துவ அதிகாரிகள் சேவை சங்கத்தை (0778162702) தொடர்பு கொள்ளவும்