ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 4.43 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மாகாணம் பஹ்லன் நகரில் இருந்து 164 கிலோமீட்டர் தொலைவில் 75 கிலோமீட்டர் ஆழத்தில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்வடைந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வீட்டை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.