விசேட தேவையுடைய மாணவர்களுக்கான சித்திரை புத்தாண்டு நிகழ்வானது இன்று (15) திருகோணமலை, மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள HOPE நிறுவனத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது HOPE நிறுவனத்தின் பணிப்பாளர் செ.கிருபாகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது HOPE நிறுவனத்தின் செயலாளர் ச.லட்சுமணன், உறுப்பினர் த.ரொகான், பட்டினமும் சூழலும் சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் செ.கௌரிசாந், மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் தெ.புரபானந்தன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT


