யாழ் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி மக்கள் கடந்த வருடத்திற்கு நன்றி கூறி இன்றய தினம் (14) பிறந்த புது வருடமான ‘விசுவாவசு’எனும் வருடத்தினை வரவேற்கும் முகமாக ஒரு காட்சிப்படுத்தல் ஒன்றினை வெற்றிலைக்கேணி சந்தியில் அணைவரும் பார்க்கும் வண்ணம் காட்சிப்படுத்தியுள்ளனர்
குறித்த காட்சிப்படுத்தலில் சென்ற வருடத்தில் பிரதேச மக்கள் போதைப்பொருள் பாவனையால் ஏற்பட்ட பிரச்சினைகளை கருத்தில் கொண்டு புது வருடத்தினை சந்தோஷமாக வரவேற்கும் முகமாக ‘இந்த வருடம் அனைவருக்கும் மது சிகரெட் இல்லாத புது வருடமாக இருக்கட்டும் ‘எனும் எண்ணக்கருவில் வரவேற்கின்றனர்
இந்த செயற்பாடு தொடர்பாக மக்களிடம் வினவியபோது வெற்றிலைக்கேணி கிராமம் கடந்த வருடங்களில் போதைப்பொருள் பாவனையால் பல பிரச்சனைகளை எதிர் நோக்கி வருவதாகவும் மற்றும் கிராமத்தில் கள்ளச்சாராய பாவனை தற்போது அதிகரித்து வருவதாகவும் இச் சம்பவங்களில் இருந்து மக்களை விழிப்புணர்வு செய்யும் நோக்கில் செய்யப்பட்டதாக கூறுகின்றனர்
இவ்வாறான காட்சிப்படுத்தல் வடமராட்சி கிழக்கு கேவில் கிராமத்திலும் காட்சி படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.