முல்லைத்தீவு – குமுழமுனை, கொட்டுக்கிணற்று பிள்ளையார் கோவிலில் தமிழ் புத்தாண்டு விசேட பூசை வழிபாடுகள் 14.04.2025இன்று இடம்பெற்றது.
இந்த விசேட பூசை வழிபாடுகளில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் பங்கேற்றிருந்தார்.
பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் ஆலயவளாகத்தில் மரக்கன்று ஒன்றும் நாட்டிவைக்கப்பட்டது.
ADVERTISEMENT
மேலும் இந் நிகழ்வில் கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் தலைவர் இ.மயூரன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் குமுழமுனை வட்டார வேட்பாளர் வீ.கலைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

