நேற்றையதினம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் புது வருட கொண்டாட்ட நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதன்போது, யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் தரம் மூன்றில் கல்வி பயிலும் சுதர்சன் அருணன் என்ற மாணவன் ஜனாதிபதியின் புதுவருட வாழ்த்து செய்தியை சிங்களத்தில் ஆற்றினார்.
இந்த கொண்டாட்டத்தில் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால, பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
ADVERTISEMENT
இவ்வாறு சிங்களத்தில் உரையாற்றிய குறித்த மாணவனின் திறமையினை பலரும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

