புதுவருடடத்தில் சந்தைகளில் காய் கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்து இருந்ததை காணக்கூடிய இருந்தது. அந்தவகையில் முருங்கைக்காய் 1kg 2000ற்கு மேலாகவும் கத்தரிக்காய்1kg 450ற்கு மேலாகவும் மற்றும் பீற்றூட் 1kg 300ற்கு மேற்பட்டதாகவும் இருந்ததை காணக்கூடியவாறு இருந்தது.
அதாவது நேற்றைய (13) புத்தாண்டு மந்திகை சந்தை நிலவரமே இவை நேற்றைய விலைகளில் மாறுபட்டு இன்றைய புத்தாண்டு தினம் இன்னும் சடுதியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து இருப்பதால் மக்கள் தாம் எதிர்பாத்து வரும் அளவில் மாறுபட்டு மிகக் குறைவான கொள்வனவையே மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த முறை மரக்கறி நுகர்வு மற்றும் புத்தாடைகள் நுகர்வு என்பன பருத்தித்துறை மற்றும் நெல்லியடி நகரப்பகுதியில் சென்ற வருடத்தை ஒப்பிடும் போது மிக மிக குறைவாகவே காணக்கூடியதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



