வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் கந்தபுர வட்டாரத்திற்கான தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த பிரதி அமைச்சர்
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் கந்தபுரம் வட்டாத்திற்கான தேசிய மக்கள் சக்தியின் பிரச்சார அலுவலகத்தை கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க திறந்து வைத்தார்.
வவுனியா, கந்தபுரம் வட்டாரத்திற்குட்பட்ட தோணிக்கல் பகுதியில் இன்று மாலை (12.04) குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும பட்சத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பிலும், தமிழ் மக்களின் ஆணையுடன் தமிழ் தவிசாளர், தமிழ் பிரதி தவிசாளர் நியமிக்கப்பட்டு பிரதேச நிர்வாகத்தை முன்னெடுப்பது தொடர்பிலும், உள்ளுராட்சி மன்றங்களால் மேற்கொள்ளக் கூடிய செயற்பாடுகள் தொடர்பாகவும் இதன்போது அமைச்சாரால் விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், அமைச்சருடன் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், கட்சியின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
