தெற்கு புளோரிடாவில் நேற்று (11) அமெரிக்க நேரப்படி காலை 11 மணிக்கு நடந்த விமான விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
வெளிநாட்டு அறிக்கைகளின்படி, விபத்துக்குள்ளானது இலகுரக விமானம் என தெரிவிக்கப்படுகிறது.
ADVERTISEMENT
போகா ரேட்டனில் இருந்து டல்லாஹஸ்ஸி சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில் போகா ரேட்டனில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விமான விபத்து நடந்த நேரத்தில் அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த ஒரு வாகன ஓட்டி தப்பிக்க முயன்றபோது அருகிலுள்ள மரத்தில் மோதி காயமடைந்தார். இருப்பினும், அவரது நிலைமை மோசமாக இல்லை என்று கூறப்படுகிறது.
விமான விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.