யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இடம் பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பத்தர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 8:50 மணியளவில் இடம் பெற்றது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
கல் ஏற்றிவந்த பாரவூர்தி ஒன்று மிக மெதுவாக சென்றுகொண்டிருந்தபோது பின்னால் சென்ற உந்துருளி பாரவூர்தி மீது மோதியதில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் பாரவூர்தி மற்றும் உந்துருளி என்பவற்றை நீதிமன்றம் நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிஸ் நிலையம் எடுத்துச் சென்றுள்ளனர்.
குறித்த விபத்தில் காயமடைந்தவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டிமூலம் கொண்டு செல்லப்பட்டபோது மரணமடைந்துள்ளார்.
சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
