கோப்பாய் பிரதேச சபைக்கான தேசிய மக்கள் சக்தியின் பிரசாரக் கூட்டம் நீர்வேலி வாய்க்காற்றரவைப் பிள்ளையார் கோவில் முன்றலில் இடம்பெற்றது.
குறித்த பிரசாரக் கூட்டத்தில், பிரதமர் ஹரிணி அமரசூரிய, கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி சபை வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் அகலந்துகொண்டிருந்தனர்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த நிலையில், வழிபாடுகள் மற்றும் மக்கள் சந்திப்புகளில் ஈடுபட்டிருந்தார்.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்காக மதத் தலங்கள் தேர்வு செய்யப்பட்டமை விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


