தவக்கால சிலுவைப்பாதையும் வழிபாடும் இன்று பிற்பகல் குடத்தனை மடுமாத ஆலயத்தில் இடம் பெற்றது.
குடத்தனை பொற்பதி ராயப்பர் தேவாலயத்திலிருந்து புறப்பட்ட சிலுவைப்பாதையும், மணல்காடு அந்தோனியார் தேவாலயத்திலிருந்து புறப்பட்ட குடத்தனை மடுமாதா ஆலயத்தை வந்தடைந்து அங்கு மணல்காடு பங்குத்தந்தை வணபிதா ஜோன் குருஸ் அடிகளார் தலமையில் ஆராதனைகள் இடம்பெற்றன.
கிறிஸ்தவ மக்களின் தவக்கால இக்காலப்பகுதியில் வருடாவருடம் மணல்காடு பங்கிற்க்கு உட்பட்ட பங்கு மக்களால் சிலுவைப்பாதை வழிபாடு நடாத்தப்பட்டு வருகின்றன.
ADVERTISEMENT
இதில் மணல்காடு பங்கிற்கு உட்பட்ட பங்குமக்கள் பலரும் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.




