அஹா என்ன ஒரு அதிசயம் எங்கு பார்த்தாலும் பச்சை பசலையாக காட்சியளிக்கும் இயற்கை. வண்ண வண்ண பூக்களில் தேன் குடிக்கும் வண்ணத்துப் பூச்சிகள், பறவைகளின் கீச்சிடும் சத்தம் நதியின் ஓட்டம் காதில் தேன் பாய்வது போல் இசை. அழகும் அற்புதமும் நிறைந்த இந்த இடத்தின் பெயர் என்னவோ…!
யாரிடம் கேட்பது…….ம்ம்
அதோ அந்த மரத்தடியில் ஒரு சிறுமி அமர்ந்து இருக்கின்றாள். அவளிடம் சென்று கேட்டால் தெரியும். இயற்கையின் சீற்றத்திற்கு ஏற்றவாறு பேரழகி. கண்ணே இந்த இடத்தின் பெயர் என்னவோ..? நான் பேரழகியா அப்படி என்றால் என்னை பார்த்து கவிதை ஒன்று சொல். இடத்தின் பெயரை நான் அப்பொழுது தான் சொல்வேன். என்னடா இவள் குறும்புக்கார சிறுமியாக இருக்கின்றாள். பொறுமையாக இரு சொல்கின்றேன். உங்கள் பெயரை சொல்லிவிட்டு கவிதையை ஆரம்பித்தால் நன்றாக இருக்கும் என்றால் சிறுமி. குரும்புக்கார சிறுமி எனது பெயர் மீரா.
காந்த கண் அழகி
மௌனமான சிரிப்பழகி
மழலை மொழியில் கொஞ்சிடும் தமிழ் பேசும் குரல் அழகி.
கரும் கூந்தல் நீட்டி உயிரை பறித்து செல்லும் பேரழகியடி நீ…
கவிதை மிகவும் அருமை ஆனால் எனக்கு பொருந்தாது. இந்த இடத்தின் பெயர் பூஞ்சோலை கிராமம். எனது பெயர் குமுதா நான் சென்று வருகிறேன் அக்கா.
கண்ணே கொஞ்சம் பொறு எனக்கு பதில் தந்தமைக்கு நன்றி உண்மையில் நீ பேரழகியடி உனக்கு ஏன் இவ்வளவு சோகம். ஏன் கண்ணீருடன் நிற்கின்றாய். ஏன் இந்த சோகம் சிறு வயதில்.. என்னிடம் பகிர்ந்து கொள் உன்னுடைய சோகத்தை….
( தொடரும்……)
