கிணற்றடித் தென்னையின் கீழ்
தென்னோலைத் துண்டொன்றை
எடுத்துப் போட்டு
தென்னை நிழலையும்
கடந்து வரும்
பனித் துளிகளை
உடலில் சுமந்து
தூங்கிய இரவுகள்
அடுத்த கிணற்றடிகளின்
நீர் இயந்திரங்களின் சத்தம்
தாலாட்டாகத் தூங்க வைக்க
அடிக்கடி விழித்து
மீண்டும் கண்களை
இறுக மூடித்
தூங்கும் முயற்சிகள்
தூங்கியது பாதி
தூக்கம் கலைந்தது மீதி என்று
தூங்கியதாகவும் இல்லை
தூக்கமில்லை என்றும் இல்லை
தோட்டத்திற்கான காவல்
ADVERTISEMENT
மெத்தைக் கட்டிலில்
போர்வைக்குள் முடங்கி
ஆழ்ந்த தூக்கத்தில்
மணிக்கூட்டின் சத்தம்
எழுப்பித் துரத்துகிறது
கிராமத்து வாழ்வைத்
தொலைத்து
திணித்துக் கொண்ட
வாழ்வுடன் இன்னும்
ஏதோ தேடல்கள்
என்னையும் அதிலே…
அ . ஜெகன்
சுவிஸ்