முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட நால்வரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு, மஹர நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கிரிபத்கொட பகுதியில் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியொன்றை போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
அதேநேரம், இந்த சம்பவம் தொடர்பில், தற்போது தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் களனி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மில்ரோய் பெரேரா ஆகியோருக்கு எதிராக மஹர நீதவான் நீதிமன்றினால் பகிரங்க பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது
ADVERTISEMENT