வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் வரும் 11.04.2025. நடைபெற உள்ள நிலையில் குறித்த கும்பாபிசேகத் திருவிழாவில் கலந்து சிறப்பிக்க, செங்கோலாதீனம். சீர்வளர்சீர். சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாசாரிய சுவாமிகள் இன்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழப்பாணத்தை வந்தடைந்தார்.
ஆதீனம் அவர்களை மாவை ஆதீனம் சார்பில் அச்சுவேலி, சிவாகம கலாநிதி. சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள் மற்றும் பக்தர்கள் மரியாதையுடன் வரவேற்றனர்.
ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் குறித்த கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள, பழனி ஆதீனம், சிறவை ஆதீனம், பேரூர் ஆதீனம், கூனம்பட்டி ஆதீனம், தருமை ஆதீனம், செங்கோல் ஆதீனம் உள்ளிட்ட சமயப் மெரியவர்களும் திருப்பதி வேத வாக்கிய பல்கலைக்கழக உபவேந்தர், சிவாச்சார்யார்கள், சிதம்பரம் தீக்ஷிதர்கள், என பல சிறப்புமிகு பெரியோர்கள் வருகை தந்து சிறப்பிக்கின்றனர்.
அத்துடன் பிலத்திலிருந்தும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் இன்னும் பலர் வருகைதரவுள்ள நிலையில் மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் கும்பாபிசேக விழா பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



