லிட்டில் இங்கிலாந்து(Bettal of littil england கிண்ணத்துக்கான 03வது முறையாக நுவரெலியா காமினி தேசிய பாடசாலைக்கும், பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரிக்கும் இடையிலான நடைபெறும் 3 நாள் மட்டுப்படுத்தப்பட்ட மாபெரும் கடினப்பந்து போட்டியின் மூன்றாவது நாளான நேற்று (08) இரண்டாவது இன்ங்ஸ்க்காக துடுப்பெடுத்து ஆடிய காமினி தேசிய பாடசாலை அணி சகல விக்கட்டுக்கலையும் இழந்து 168 ஓட்டங்களை பெற்றது.
முதல் இன்னிங்ஸ்சில் 156 ஓட்டங்ளை பெற்ற பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரி அணி காமினி தேசிய பாடசாலை அணியை விட 05 ஓட்டங்கள் முன்னிலை வகித்தது.
நேற்று மதிய உணவின் பின்னர் இரண்டாவது இன்னிங்ஸ்சின் 164 என்ற வெற்றி இலக்கை நோக்கி பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரி அணி துடுப்பெடுத்து ஆடிய நிலையில் 92 ஓட்டங்களுடன் சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தனர்.
Battle of littile england கிண்ணத்தை 72 ஓட்டங்களால் காமினி தேசிய பாடசாலை அணி வெற்றியை தனதாக்கியது.
அந்த அடிப்படையில் 2023 ஆம் ஆண்டு சமநிலையிலும்.
2024 ஆம் ஆண்டு பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரி வெற்றி பெற்றது.
2025 ஆம் ஆண்டு இந்த வருடம் காமினி தேசிய பாடசாலை வெற்றிபெற்றுள்ளது.



