1860
எதுவார்து – லேயோன் இஸ்க்காட் டெ மார்ட்டின்வில் என்பவர் தனது போனோட்டோகிராஃப் இயந்திரத்தில் முதல் தடவையாக மனித ஒலியைப் பதிவு செய்தார்.
1865
அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புத் தளபதி ராபர்ட் ஈ. லீ தனது 26,765 பேருடனான படைகளுடன் வர்ஜீனியாவில் யுலிசீஸ் கிராண்ட்டிடம் சரணடைந்ததில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1916
முதலாம் உலகப் போர்: வெர்டன் சமரில், ஜேர்மனிப் படைகள் தமது மூன்றாவது தாக்குதலை ஆரம்பித்தன.
1937
கமிக்காசு என்ற வானூர்தி பிரித்தானியா வந்தது. இதுவே ஜப்பானில் தயாரிக்கப்பட்டு ஐரோப்பாவுக்கு வந்த முதலாவது வானூர்தி ஆகும்.
1940
இரண்டாம் உலகப் போர்: வெசெரியூபங் நடவடிக்கை: டென்மார்க், நோர்வே மீது ஜேர்மனி தாக்குதலை ஆரம்பித்தது.
1940
விட்குன் குவிசிலிங்கு நோர்வேயின் ஆட்சியைக் கைப்பற்றினார்.
1942
இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியக் கடற்படை இலங்கையின் திருகோணமலை நகரைத் தாக்கியது.
1942
இரண்டாம் உலகப் போர்: பட்டான் சமர் முடிவுற்றது. ஜப்பானின் 1-ஆம் வான்படை இந்தியப் பெருங்கடலில் நடத்திய தாக்குதலில் பிரித்தானியாவின் எர்மெசு என்ற வானூர்தித் தாங்கிக் கப்பல், அவுஸ்திரேலியாவின் வம்பயர் என்ற போர்க் கப்பல் ஆகியன மூழ்கின.
1945
இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியின் அட்மிரல் சீர் என்ற போர்க்கப்பல் பிரித்தானிய வான்படையால் மூழ்கடிக்கப்பட்டது.
1947
அமெரிக்காவில் டெக்சாஸ், ஒக்லகோமா, மற்றும் கேன்சசு மாநிலங்களில் சூறாவளி தாக்கியதில் 181 பேர் உயிரிழந்தனர். 970 பேர் காயமடைந்தனர்.
1948
எருசலேம் நகரில் டெயிர் யாசின் என்ற கிராமத்தில் 120 அரபு மக்கள் சீயோனிசத் துணை இராணுவக் குழுக்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
1952
ஊகோ பாலிவியானின் அரசு பொலிவிய தேசியப் புரட்சி மூலம் கவிழ்க்கப்பட்டது. இதன் மூலம் வேளாண்மைச் சீர்திருத்தம், பொது வாக்குரிமை, தேசியமயமாக்கல் ஆகியன அறிமுகப்படுத்தப்பட்டன.
1957
சுயெஸ் நெருக்கடி: எகிப்தில், சுயஸ் கால்வாய் கப்பல் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டது.
1957
இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா இனப்பிரச்சினைத் தீர்வுக்காக ஏற்றுக் கொண்ட பண்டா–செல்வா ஒப்பந்தத்தை பௌத்த பிக்குகளின் எதிர்ப்பை அடுத்து மீளப்பெறுவதாக அறிவித்தார்.
1959
மேர்க்குரித் திட்டம்: ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளி வீரர்கள் ஏழு பேரின் பெயர்களை நாசா அறிவித்தது.
1967
போயிங் 737 தனது முதலாவது பறப்பை மேற்கொண்டது.
1969
முதலாவது பிரித்தானியத் தயாரிப்பான கான்கோர்டு 002 தனது முதலாவது பறப்பை மேற்கொண்டது.
1984
யாழ்ப்பாணம் அடைக்கல மாதா கோயில் இராணுவத்தினரின் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானது.
1984
இலங்கை இராணுவ வண்டி மீது யாழ்ப்பாணம் மருத்துவமனை வீதியில் விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் 19 படையினர் கொல்லப்பட்டனர்.
1989
திபிலீசி படுகொலை: ஜோர்ஜியாவில் சோவியத் எதிர்ப்புப் போராட்டத்தின் போது சோவியத் இராணுவத்தினரால் மக்கள் தாக்கப்பட்டதில் 20 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்.
1991
ஜோர்ஜியா சோவியத் ஒன்றியத்திலிருந்து விடுதலையை அறிவித்தது.
1992
முன்னாள் பனாமா அரசுத்தலைவர் மனுவேல் நொரியேகாவுக்கு ஐக்கிய அமெரிக்காவின் நீதிமன்றம் 30 ஆண்டுகால சிறைத்தண்டனை அளித்தது.
2003
பக்தாத் நகரை அமெரிக்கக் கூட்டுப் படையினர் கைப்பற்றினர். சதாமின் 24 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.
2005
இளவரசர் சார்லசு கார்ன்வால் இளவரசி கமில்லாவைத் திருமணம் புரிந்தார்.
2009
சியார்சியா தலைநகர் திபிலீசியில், 60,000 பேருக்கு மேல் மிக்கைல் சாக்கஷ்விலி அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
2013
ஈரானில் 6.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 32 பேர் உயிரிழந்தனர், 850 பேர் காயமடைந்தனர்.
2017
குருத்து ஞாயிறு தேவாலயக் குண்டுவெடிப்பு: எகிப்தில் டன்டா, அலெக்சாந்திரியா நகரங்களில் உள்ள கோப்திக்குத் தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களில் 47 பேர் கொல்லப்பட்டனர்.




