சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு மாத்திரம் இலவச (Wifi) வழங்குவதாகவும் வெளிநாட்டவர்களுக்கு இவ் வசதிகள் இல்லையெனவும் பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தை வந்தடைந்ததும் அவர்களின் இணைப்பு துண்டிக்கப்படுகின்ற நிலையில் வெளிநாட்டவர்களுக்கு அங்கு உடனடியாக (SIM) அட்டை எடுப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் இவ் இலவச (wifi) இணைப்பதன் மூலம் மிகவும் இலகுவாக இருப்பதாக கருதுகின்றனர்.மேலும் சுற்றுளா பயணிகளை கவரும் நோக்குடன் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் சுற்றுளா பயணிகளின் வருகை அதிகரிக்ககூடும்.
இவ் செயற்பாட்டினை கண்டித்து இதற்கான உரிய நடவடிக்கை எடுக்குமாறு பயணிகளின் வேண்டுகோளாக இருக்கின்றன.