இச் சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் சாமி மலை பகுதியில் நேற்று இடம் பெற்று உள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் தந்தையை பிரிந்து வாழ்ந்த மாணவன் சாமி மலை பகுதியில் உள்ள ஸ்ரஸ்பி தோட்ட எனன்டல் பிரிவில் தனது தாயிடம் வசித்து வந்தார் எனவும் நேற்றைய தினம் தாயார் பணிக்கு சென்ற வேளையில் தான் வசித்து வந்த வீட்டில் தனக்கு தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார் எனவும் கடந்த சில நாட்களாக மன அழுத்தம் காரணமாக சோகமாக இருந்து உள்ளார் என முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.
மேலும் சிறுவனின் உடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் உள்ள சவசாலையில் வைக்கப்பட்டு இன்று காலை சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற் கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.