1827
ஆங்கிலேய மருந்தியலாளர் ஜோன் வோக்கர் தான் முந்தைய ஆண்டு கண்டுபிடித்த தீக்குச்சியை விற்பனைக்கு விட்டார்.
1829
பின்னாள் புனிதர் இயக்கத்தின் நிறுவனர் இரண்டாம் யோசப்பு இசுமித்து மோர்மொன் நூலை மொழிபெயர்க்க ஆரம்பித்தார்.
1831
பிரேசிலின் முதலாம் பெட்ரோ பேரரசர் தமது பதவியைத் துறந்து, தனது சொந்த நாடான போர்த்துக்கல் நான்காம் பேதுரோ என்ற பெயரில் மன்னரானார்.
1868
கனடாக் கூட்டமைப்பின் தந்தைகளுள் ஒருவர் தோமசு டார்சி மெக்கீ படுகொலை செய்யப்பட்டார்.
1906
விசுவியசு எரிமலை வெடித்தில் நாபொலியில் பெரும் சேதம் ஏற்பட்டது.
1906
எஸ்ப்பானியா மற்றும் பிரான்சு ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் மொரோக்கோ வந்தது.
1927
முதலாவது தொலைத்தூர தொலைக்காட்சி சேவை வாசிங்டன் நகரம், நியூயோர்க் நகரம் ஆகியவற்றிற்கிடையில் மேற்கொள்ளப்பட்டது.
1928
வால்ட் டிஸ்னி தனது புகழ்பெற்ற கார்ட்டூன் பாத்திரமான மிக்கி எலியின் படத்தை வரைந்தார்.
1939
இரண்டாம் உலகப் போர்: இத்தாலி அல்பேனியாவை முற்றுகையிட்டது.
1942
இரண்டாம் உலகப் போர்: ஆட்மிரால்ட்டி தீவுகளை ஜப்பான் கைப்பற்றியது.
1943
உக்ரைனில் டெரெபோவ்லியா என்ற இடத்தில் நாட்சிகள் 1,100 யூதர்களை அரை நிர்வாணமாக்கி நகர வீதி வழியே அழைத்துச் சென்று பின்னர் அவர்களைச் சுட்டுக் கொன்று புதைத்தனர்.
1945
இரண்டாம் உலகப் போர்: உலகின் மிகப்பெரும் போர்க் கப்பலான ஜப்பானின் யமாட்டோ ஓக்கினாவா அருகில் தென்கோ நடவடிக்கையின் போது அமெரிக்கப் கடற்படையினரால் மூழ்கடிக்கப்பட்டது.
1946
பிரான்சிடம் இருந்தான சிரியாவின் விடுதலை அங்கீகரிக்கப்பட்டது.
1948
உலக சுகாதார அமைப்பு ஐக்கிய நாடுகள் அவையால் தொடங்கப்பட்டது.
1948
சீனாவில் ஷங்காயில் பௌத்தமத தலம் ஒன்று எரிந்ததில் 20 புத்த குருக்கள் உயிரிழந்தனர்.
1955
வின்ஸ்டன் சர்ச்சில் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
1964
ஐபிஎம் தனது சிஸ்டம் 360 ஐ அறிவித்தது.
1978
யாழ்ப்பாணத்தில் இலங்கையின் காவல்துறை அதிகாரி பஸ்தியாம்பிள்ளை உட்பட பல காவல்துறையினர் கொல்லப்பட்டனர்.
1978
நியூத்திரன் குண்டு தயாரிக்கும் திட்டத்தை அமெரிக்கத் தலைவர் ஜிம்மி கார்ட்டர் கை விட்டார்.
1983
ஸ்டோரி மஸ்கிரேவ், டொன் பீட்டர்சன் இருவரும் விண்ணோடம்|விண்ணோடத்தில் இருந்து விண்ணில் நடந்த முதல் வீரர்களானார்கள்.
1989
கொம்சொமோலெட்ஸ் என்ற சோவியத் நீர்மூழ்கிக் கப்பல் நோர்வேயில் விபத்துக்குள்ளாகி மூழ்கியதில் 42 பேர் உயிரிழந்தனர்.
1990
எஸ்க்காண்டினாவியன் ஸ்டார் பயணிகள் கப்பல் தீப்பிடித்ததில் 159 பேர் உயிரிழந்தனர்.
1994
ருவாண்டா இனப்படுகொலை: ருவாண்டாவின் கிகாலியில் துட்சி இனத்தவர்களை அழிக்கும் படலம் ஆரம்பமானது.
1995
ரஷ்சியத் துணை இராணுவப் படைகள் செச்சினியாவின் சமாசுக்கி நகரில் பொதுமக்களைத் தாக்கிக் கொன்றன.
2003
அமெரிக்கப் படைகள் பக்தாதைக் கைப்பற்றின. அடுத்த இரு நாட்களில் சதாம் உசைனின் ஆட்சி வீழ்ந்தது.
2007
தமிழ்நாட்டில் சென்டூரில் நெடுஞ்சாலை அமைப்புக்கென கொண்டு செல்லப்பட்ட வெடிபொருட்கள் அடங்கிய வாகனம் ஒன்று வெடித்ததில் 16 பேர் உயிரிழந்தனர்.
2009
பெருவின் முன்னாள் ஜனாதிபதி ஆல்பர்ட் புஜிமோரி பொதுமக்கள் படுகொலைகள், கடத்தல்களுக்கு உத்தரவிட்டமைக்காக 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார்.
2015
தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் செம்மரக் கடத்தல் குற்றவாளிகள் என்று கூறப்பட்டு ஆந்திரப் பிரதேச கடத்தல் தடுப்புப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.




