மதுபான சாலைகள் வைத்திருப்பவர்கள் எரிப்பொருள் நிரப்பு நிலையம் வைத்திருப்போர்களை பட்டியலிட்டு ஊழல்வாதிகள் என கூறி விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர். தமிழ் முற்போக்கு கூட்டணியை பொருத்தவரையில் நாங்கள் மக்களுக்கு நேர்மையாக சேவை செய்திருக்கின்றோம் ஆகையால் நாங்கள் சுத்தவாழிகள்.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் எவரும் பணம் செலவு செய்ய வேண்டியதில்லை. கடந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பணம் செலவு செய்யவில்லை ஆனால் மக்கள் அவர்களுக்கு வாக்களித்துள்ளார்கள்.
வாசிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் 4500மில்லியன் ரூபாய் இந்திய அரசாங்கம் கொடுத்த நிதியாகும் மிகுதி எஞ்சியுள்ள 2500மில்லியன் ரூபாய் நிதியினை வைத்துக்கொண்டு முழு மலையகத்திற்கும் சேவை செய்வது என்பது கடினமான விடயமாகும்.
இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் எமது தாய் தந்தையரின் பிள்ளைகள் போட்டியிடுகின்றனர். ஆகவே அவர்களுக்கு வாக்களித்து தோட்ட தொழிலாளியின் பிள்ளைகளை உள்ளுராட்சி மன்ற தலைவர்களாகவும் உறுப்பினர்களாகவும் தெரிவு செய்ய வேண்டும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் குறிப்பிட்டார்.