இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பூநகரி பிரதேச வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் இன்றையதினம் (2025.04.08) பூநகரி – செம்மன்குன்று பகுதியில் நடைபெற்றுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தலைமையில், கட்சியின் கிளிநொச்சி மாவட்டக்கிளைச் செயலாளர் வீரவாகு விஜயகுமார் அவர்களின் பங்கேற்போடு நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், பூநகரி பிரதேச வேட்பாளர்களும், கட்சியின் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டிருந்ததுடன், தேர்தல் பிரசாரப் பணிகள் சார்ந்து தமது கருத்துகளையும் பகிர்ந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT




