தேசிய மக்கள் சக்தியின் நானாட்டான் பிரதேச சபைக்கான மக்கள் சந்திப்பு நேற்று சனிக்கிழமை (5) மாலை நாடாளுமன்ற உறுப்பினர் திலகநாதன் தலைமையில் நடைபெற்றது. இதன் போது நானாட்டான் பிரதேச சபைக்கான வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.
நானாட்டான் பிரதேச சபைக்கான வாழ்க்கை பெற்றான் கண்டல் வட்டார உறுப்பினர்களை ஆதரித்து மக்கள் சந்திப்பு இடம்பெற்றது .
இதன் போது எருவிட்டான் மற்றும் வாழ்க்கை பெற்றான் கண்டல் ஆகிய கிராமங்களில் இருந்து மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில்,
நானாட்டான் ஒரு பின்தங்கிய பிரதேசம். பாதைகள் சீரற்ற நிலையில் காணப்படுகின்றது. மைதானம் எந்தவிதமான வசதியும் அற்ற நிலையில் காணப்படுகின்றது.
உள்ளூராட்சி சபையை கைப்பற்றிய குறைகளை நிவர்த்தி செய்வதாகவும் கிராம உள்ளூர் வீதிகள் அபிவிருத்தி செய்வதாகவும் கூறினார்.

