வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக பெண்களுக்கான கபடி போட்டியில் செம்பியன் பற்று செம்பியன் விளையாட்டு கழகத்தினர் செம்பியனை தமதாக்கி கொண்டனர்
யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கழகங்களுக்கான பெண்களுக்கான கபடி போட்டியில் பலத்த போட்டியின் மத்தியில் செம்பியன் பற்று செம்பியன் விளையாட்டு கழகத்தினர் சம்பியனை தமதாக்கி கொண்டனர்
குறித்த போட்டியானது இன்று (5)மாலை 4மணியளவில் மாமுனை கலைமகள் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது
இறுதிப்போட்டியில் மாமுனை கலைமகள் விளையாட்டு கழகத்தினரை எதிர்த்து செம்பியன் பற்று செம்பியன் விளையாட்டு கழகத்தினர் மோதினர்
பலத்த போட்டியில் இடம்பெற்ற இறுதிப் போட்டி இறுதியில் செம்பியன் பற்று செம்பியன் விளையாட்டு கழகத்தினர் செம்பியனை தமதாக்கி கொண்டனர்.

