1804
முதற்தடவையாக விண்வீழ்கல் ஒன்று வீழ்ந்தது ஸ்கொட்லாந்தில் பதிவானது.
1818
ஜோஸ் டெசான் மார்ட்டின், பெர்னார்டோ ஓஇகின்சு தலைமையில் சிலியின் விடுதலை இயக்கம் வெற்றி கண்டது. 2,000 எசுப்பானியர்களும், 1000 சிலியர்களும் உயிரிழந்தனர்.
1867
இலங்கையில் முதலாவது சுற்றுலாப் பயண தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1879
பொலிவியா, மற்றும் பெரு மீது சிலி போரை அறிவித்தது. பசிபிக் போர் ஆரம்பமானது.
1897
கிரேக்கத்துக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையில் போர் ஆரம்பமானது.
1900
கிரீட்டில் தொல்லியலாளர்கள் சித்திர எழுத்துகளுடன் கூடிய பெருந்தொகையான களிமண் பலகைகளைக் கண்டுபிடித்தனர்.
1930
மகாத்மா காந்தி அரபிக் கடலின் குஜராத் கடற்கரையோரப் பகுதியான தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி உப்பைக் கையிலே அள்ளி எடுத்து வந்து தனது 241 மைல் நடைப் பயணத்தை முடித்தார்.
1932
பின்லாந்தில் மதுவிலக்கு கொள்கை முடிவுக்கு வந்தது.
1932
நியூபவுன்லாந்தில் பத்தாயிரத்துக்கும் அதிகமான கலவரக்காரர்கள் கொலோனியல் கட்டிடத்தைக் கைப்பற்றினர்.
1936
மிசிசிப்பியில் சுழற்காற்று தாக்கியதில் 233 பேர் உயிரிழந்தனர்.
1942
இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் போர்க்கப்பல்கள் உயிர்ப்பு ஞாயிறு அன்று இலங்கையைத் தாக்கின. தென்மேற்குப் பகுதியில் கோர்ன்வால், டோர்செட்சயர் என்னும் இரண்டு பிரித்தானியக் கப்பல்கள் மூழ்கின.
1943
இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் பெல்ஜியத்தின் மீது தவறுதலாக குண்டுகளை வீசியதில் 209 சிறுவர்கள் உட்பட 900 பேர் கொல்லப்பட்டனர்.
1944
இரண்டாம் உலகப் போர்: கிளெய்சோரா என்ற கிரேக்க நகரில் 270 உள்ளூர் மக்கள் ஜேர்மனியரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1945
பனிப்போர்: யுகோசுலாவியாவினுள் சோவியத் படைகள் தற்காலிகமாக நுழைவதற்கு அந்நாட்டு அரசுத்தலைவர் யோசப் டீட்டோ சோவியத் ஒன்றியத்துடன் உடன்பாடு செய்து கொண்டார்.
1946
11 மாதங்கள் ஆக்கிரமிப்பின் பின்னர் சோவியத் படைகள் டென்மார்க் தீவான போர்ன்ஹோல்மை விட்டு விலகின.
1949
அமெரிக்காவின் இலினோய் மாநிலத்தில் மருத்துவமனை ஒன்றில் தீப்பிடித்ததில் 77 பேர் உயிரிழந்தனர்.
1951
இலங்கை, கட்டுநாயக்காவில் 34 பேருடன் சென்ற பிரித்தானிய வான்படை ஏசுட்டிங்சு விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. உயிரிழப்புகள் இல்லை.
1956
கியூபப் புரட்சி: பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசுத்தலைவர் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவுடன் போரை அறிவித்தார்.
1956
இலங்கைப் பொதுத்தேர்தலில் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தலைமையிலான மகாஜன எக்சத் பெரமுன அறுதிப் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது.
1957
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பொதுவுடமைவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றினர். ஈ. எம். எஸ். நம்பூதிரிபாத் முதலமைச்சரானார்.
1964
பூட்டான் பிரதமர் ஜிக்மி டோர்ஜி இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1969
வியட்நாம் போர்: அமெரிக்க நகரங்களில் போருக்கு எதிராகப் பெரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
1971
இலங்கையில் சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் நாட்டின் தென் பகுதிகளில் ஆயுதக் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
1976
சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் மாபெரும் ஆர்ப்பாட்ட நிகழ்வு இடம்பெற்றது.
1981
தமிழீழப் போராளிகள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
1991
அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் அத்திலாந்திக் ஏர்லைன்சு வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் விண்வெளி வீரர் சொன்னி கார்ட்டர் உட்பட அதில் பயணம் செய்த அனைத்து 23 பேரும் உயிரிழந்தனர்.
1992
பெருவின் அரசுத்தலைவர் ஆல்பர்ட் புஜிமோரி நாடாளுமன்றத்தை இராணுவ உதவியுடன் கலைத்தார்.
1998
அகாசி கைக்ஜோ, உலகின் மிகப் பெரிய தொங்கு பாலம், ஜப்பானில் 3.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் அமைக்கப்பட்டது.
2009
வட கொரியா சர்ச்சைக்குரிய தனது குவாங்மியோங்சொன்-2 என்ற ஏவுகணையை ஜப்பான் மீதாக ஏவியது.
2010
மேற்கு வர்ஜீனியாவில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பில் சிக்கி 29 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.




