அடுத்தவரின் வாழ்முறையை
கட்டுப்படுத்துவதில் சாதித்ததாகப்
பெருமை கொள்கிறாய்
ADVERTISEMENT
தனி மனித சுதந்திரத்தை
உனக்காக விட்டுக்கொடுத்ததை
எண்ணி பெருமை கொண்டு
அடுத்தவரின் மனோநிலையில்
இருந்து பார்க்கத் தவறுகிறாய்
ஒருவரின் விட்டுக்கொடுப்பு
உனது சுயநலனின் வெற்றி
என்பதை உணர மறுக்கிறாய்
உனது சாதிப்புகள்
அடுத்தவரை பாதிப்பதை
எப்போதும் நீ நினைப்பதில்லை
சில தனி மனித விருப்புகள்
சில தனி மனித தனித்துவத்தின்
இழப்பு என்பதே யதார்த்தமாக
சொந்த நலனின் பக்கப்
பார்வைகளும் விருப்புகளுமே
நியாயமாகச் சொல்வதில்
தனது வெற்றியை
இன்னொருவரின் தோல்வியாகப்
பார்த்தல் எப்படிச் சாத்தியம்….
அ . ஜெகன்
சுவிஸ்