1834
கிரேக்க விடுதலைப் போரின் தளபதிகள் நாட்டுத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டார்கள்.
1865
அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டுப் படைகள் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தலைநகர் ரிச்மண்ட் நகரைக் கைப்பற்றினர்.
1885
விசைப்பொறிகளின் வடிவமைப்புக்கான ஜேர்மனியக் காப்புரிமத்தை காட்லீப் டைம்லர் பெற்றார்.
1888
லண்டன் ஈஸ்ட் என்ட் பகுதியில் பதினொரு பெண்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்கள்.
1895
ஆஸ்கார் வைல்டு தாக்கல் செய்த அவதூறு வழக்கு விசாரணை ஆரம்பமானது, இறுதியில் தற்பால்சேர்க்கை குற்றத்திற்காக அவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
1917
வெளிநாட்டில் தஞ்சமடைந்திருந்த விளாதிமிர் லெனின் ரஷ்சியா திரும்பினார்.
1922
ஜோசப் ஸ்டாலின் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் முதற் பொதுச் செயலாளரானார்.
1933
நாட்சி ஜேர்மனியில் யூதர்களின் வணிக நிறுவனங்களைப் புறக்கணிக்கும் நடவடிக்கை வெற்றி பெறவில்லை.
1942
இரண்டாம் உலகப் போர்: பட்டான் தீபகற்பத்தில் ஜப்பானியப் படை அமெரிக்க மற்றும் பிலிப்பைன்ஸ் படையினர் மீது தாக்குதலை ஆரம்பித்தது.
1948
பனிப்போர்: அமெரிக்க ஜனாதிபதி ஹாரி எஸ். ட்ரூமன் 16 நாடுகளுக்கு $5 பில்லியன் உதவித்தொகை வழங்கும் உத்தரவில் கையொப்பமிட்டார்.
1948
தென் கொரியாவில் ஜேஜு என்ற இடத்தில் மனித உரிமை மீறல் மற்றும் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது.
1958
பிடெல் காஸ்ட்ரோவின் புரட்சி இராணுவம் அவானா மீது தாக்குதல் தொடுத்தது.
1966
சோவியத்தின் லூனா 10 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டத்தை அடைந்தது. பூமியை விட வேறொரு விண் பொருளைச் சுற்ற ஆரம்பித்த முதலாவது விண்கலம் இதுவாகும்.
1973
உலகின் முதலாவது நகர்பேசி அழைப்பை நியூயோர்க் நகரில் மோட்டோரோலா நிறுவனத்தின் மார்ட்டின் கூப்பர் பெல் ஆய்வுகூடத்தின் ஜொயெல் ஏங்கல் என்பவருக்கு மேற்கொண்டார்.
1974
அமெரிக்க மாநிலங்களில் ஆரம்பித்த கடும் சூறாவளி காரணமாக 315 பேர் உயிரிழந்தனர். 5,500 பேர் வரையில் காயமடைந்தனர்.
1975
அமெரிக்காவின் பாபி ஃபிஷர் அனதோலி கார்ப்பொவ்வுடன் சதுரங்கப் போட்டியில் பங்குபற்ற மறுத்ததால் கார்ப்பொவ் உலக வெற்றிக்கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டார்.
1981
உலகின் முதலாவது பெயரத்தகு கணினி “ஒஸ்போர்ன் 1” சான் பிரான்சிஸ்கோவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1982
போக்லாந்து தீவுகளை ஆர்ஜென்டீனாவிடம் இருந்து மீளப் பெறும் முகாமாக பிரித்தானியா தனது கடற்படையை அங்கு அனுப்பியது.
1996
ஐக்கிய அமெரிக்காவின் வான்படை விமானம் ஒன்று குரோவாசியாவில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அமெரிக்க அரசின் வணிக செயலாளர் ரொன் பிரௌன் உட்பட 35 பேர் உயிரிழந்தனர்.
1997
அல்ஜீரியாவில் தாலித் என்ற கிராமத்தில் 52 பொதுமக்கள் ஆயுததாரிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.
2004
மத்ரித் தொடருந்து குண்டுத்தாக்குதல்களில் ஈடுபட்ட இஸ்லாமியத் தீவிரவாதிகள் காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டதை அடுத்து அவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொண்டனர்.
2009
நியூயார்க்கில் பிங்காம்ப்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
2010
ஆப்பிள் நிறுவனம் 1-வது தலைமுறை ஐ-பேடு கைக் கணினியை வெளியிட்டது.
2016
214,488 வணிக நிறுவனங்களின் தகவல்கள் அடங்கிய பனாமா ஆவணங்கள் வெளியிடப்பட்டது.
2017
ரஷ்சியாவில் சென் பீட்டர்ஸ்பேர்க் சுரங்கத் தொடருந்தில் குண்டு வெடித்ததில் 14 பேர் கொல்லப்பட்டு, பலர் காயமடைந்தனர்.
2018
கலிபோர்னியா, சான் புரூனோ நகரில் உள்ள யூடியூப் தலைமையலுவலகத்தில் பெண் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் நால்வர் காயமடைந்தனர். துப்பாக்கிதாரி தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.




