நேற்று காலை அநுராதபுரம் ஏ-9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய யாழ்ப்பாணம் – சாவகச்சேரியை சேர்ந்த 44 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரது கால் அகற்றப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த குடும்பஸ்தர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பாரவூர்தி ஒன்றில் முன்னால் இருந்து பயணித்துக் கொண்டிருந்தார். இதன்போது வேகக் கட்டுப்பாட்டை இழந்த குறித்த பாரவூர்தியானது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பாரவூர்தி மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இந்நிலையில் குறித்த விபத்தில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன்போது அவரது ஒரு காலை அகற்ற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் குறித்து விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


