1800
பைசாந்தியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் முதலாவது தன்னாட்சியுரிமை கொண்ட கிரேக்க மாநிலம் செப்டின்சுலார் குடியரசு கான்ஸ்டண்டினோபில் உடன்பாடு மூலம் அமைக்கப்பட்டது.
1800
லுடுவிக் வான் பேத்தோவன் தனது முதலாவது சிம்பொனியை வியன்னாவில் அரங்கேற்றினார்.
1801
பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரித்தானியக் கடற்படை டென்மார்க் கடற்படைக் கப்பற்தொகுதியைக் கைப்பற்றியது.
1851
நான்காம் இராமா தாய்லாந்தின் மன்னராக முடிசூடினார்.
1863
அமெரிக்க உள்நாட்டுப் போர்: வர்ஜினியாவில் ரிச்மண்ட் நகரில் உணவுப் பற்றாக்குறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கும் அதிகமான பெண்கள் அமெரிக்கக் கூட்டமைப்புக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
1865
அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜெபர்சன் டேவிஸ் மற்றும் அவரது அமைச்சர்கள் கூட்டமைப்பின் தலைநகர் ரிச்மண்ட்டை விட்டுப் புறப்பட்டனர்.
1900
புவேர்ட்டோ ரிக்கோவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சி வழங்கும் தீர்மானம் அமெரிக்க சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
1902
ரஷ்சியப் பேரரசின் உட்துறை அமைச்சர் திமீத்ரி சிப்பியாகின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் படுகொலை செய்யப்பட்டார்.
1902
ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது முழுநேரத் திரையரங்கு கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் திறக்கப்பட்டது.
1911
அவுஸ்திரேலியாவில் முதலாவது தேசிய மக்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
1912
டைட்டானிக் கப்பல் தனது முதலாவது கடற்பயண ஒத்திகையை ஆரம்பித்தது.
1917
முதல் உலகப் போர்: அமெரிக்க ஜனாதிபதி ஊட்ரோ வில்சன் ஜேர்மனியப் பேரரசு மீது போர்ப் பிரகடனத்தை அறிவிக்க சட்டமன்றத்தில் ஆணை கேட்டார்.
1921
இன்றைய ஈரானை அமைப்பதற்கான கொரசான் இராணுவ அரசு நிறுவப்பட்டது.
1930
செவ்தித்து பேரரசி மர்மமான முறையில் இறந்ததை அடுத்து முதலாம் ஹைலி செலாசி எத்தியோப்பியாவின் பேரரசராக அறிவிக்கப்பட்டார்.
1975
வியட்நாம் போர்: வட வியட்நாமியப் படையினரின் ஊடுருவலை அடுத்து பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக குவாங்கு காய் மாகாணத்தை விட்டு வெளியேறினர்.
1976
இளவரசர் நொரடோம் சீயனூக் கம்போடியத் தலைவர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
1979
சோவியத், சிவெர்திலோவ்சுக் நகரில் உள்ள உயிரி – ஆயுத ஆய்வுகூடத்தில் தவறுதலாக ஆந்த்ராக்ஸ் நுண்ணுயிரிகள் வெளியேற்றப்பட்டதால் 66 பேர் உயிரிழந்தனர், கணக்கிலடங்கா உயிரினங்கள் கொல்லப்பட்டன.
1982
போக்லாந்து போர்: போக்லாந்து தீவுகள் மீது அர்கெந்தீனா போர் தொடுத்தது.
1983
யாழ்ப்பாணம் அரச அதிபரின் செயலகத்தில் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது.
1984
ராகேஷ் சர்மா சோயூஸ் டி-11 விண்கலத்தில் பயணித்து, விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
1989
கியூபாவுடனான உறவுகளை சீர் செய்யும் நோக்கில் பிடல் காஸ்ட்ரோவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் கியூபாவின் அவானா நகரை வந்தடைந்தார்.
1992
யூகொசுலாவியாவின் பிசெல்சினா நகரில் 42 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
2002
இஸ்ரேலியப் படைகள் பெத்லகேம் பிறப்பிடத் தேவாலயத்தைச் சுற்றிவளைத்ததை அடுத்து, பாலத்தீனப் போராளிகள் அங்கிருந்து விலகினர்.
2006
அமெரிக்காவின் டென்னிசி மாநிலத்தில் வீசிய சுழற்காற்றினால் 29 பேர் உயிரிழந்தனர்.
2007
சொலமன் தீவுகளுக்கு அண்மையில் கடலின் அடியில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக எழுந்த ஆழிப்பேரலை இத்தீவுகளில் பலத்த சேதத்தை உண்டுபண்ணியது. 8 பேர் வரையில் உயிரிழந்தனர்.
2007
ஆப்கானித்தானில் இடம்பெற்ற பெரும் வெள்ளப்பெருக்கினால் 512 பேர் கொல்லப்பட்டனர்.
2011
மும்பையில் துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இலங்கையை 6 இழப்புகளால் வென்று உலகக் கோப்பையைப் பெற்றது.
2012
கலிபோர்னியாவில் ஒயிக்கோசு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் கொல்லப்பட்டனர், மூவர் காயமடைந்தனர்.
2014
அமெரிக்காவில் டெக்சசு மாநிலத்தில், இராணுவ முகாம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நால்வர் கொல்லப்பட்டனர், 16 பேர் காயமடைந்தனர்.
2015
கென்யாவின் கரிசா பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 148 பேர் கொல்லப்பட்டனர்.



