கிராமப்புற பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை விரித்தி செய்து அவர்களுக்கு தேவையான பௌதீக வளங்களை நிவர்த்தி செய்யும் நோக்குடன் திருகோணமலை மக்கள் சேவை மன்றம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் ”மகிழ்ச்சியான கற்றலை நோக்கி….” என்ற தொணிப்பொருளின் கீழ் மேற்படி இரு வகையான உதவித்திட்டங்கள் சர்வதேச லயன்கழகத்தி சிட்னி மாவட்டக் கிளையின் தலைவியினால் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வுகளுக்கு பிரதம விரிந்தினராக சர்வதேச லயன்கழத்தின் சிட்னி நகரக் கிளையின் தலைவியும் பிரபல சமூக ஆர்வலருமான திருமதி லைலா மகாதேவன் கலந்து கொண்டதுன் மேற்படி பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், மக்கள் சேவை மன்ற உத்தியோகத்தர்கள், பவுன்டேஷன் போ குட்நஸ் (FOG) நிறுவன உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவுஸ்ரேலியா, சிட்டி நகரத்தில் இயங்கிவரும் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் மாவட்டம் 201N5 சிட்டினிக் கிளைத் தலைவியும் பிரபல சமூக ஆர்வலருமான திருமதி லைலா மகாதேவன் அவர்களின் நிதி அனுசரணையில் திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் 70 வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் மாணவர்களுக்கு பாதணிகளும், 50 மாணவர்களுக்கு சோலார் மின்விளக்குகளும் வழங்கும் நிகழ்வு இன்று (01) திருகோணமலை கோபாலபுரம் தமிழ் மிஷன் கலவன் பாடசாலையிலும் கும்பிறுப்பிட்டி தமிழ் மிஷன் கலவன் பாடசாலையிலும் இடம்பெற்றது.