மருதங்கேணியில் இயங்கிவருகின்ற பாதுகாப்பு இல்லம் (Safe House) தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (01.04.2025) காலை 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் பாதுகாப்பு இல்லத்தில் தங்கியுள்ளவர்களுக்கான உணவு வசதிகள், பாதுகாப்பு போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் அரசாங்க அதிபர் தலைமையில் ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பிரதம கணக்காளர், மருதங்கேணி பிரதேச செயலாளர், உதவி மாவட்டச் செயலாளர், மாவட்ட மற்றும் மருதங்கேணி பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் அலுவலகர்கள் உள்ளிட்ட தொடர்புடைய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

