ஒன்றினைந்த கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கான கிராமிய அபிவிருத்தித் தயாரித்தல் தொடர்பான பயிற்சி நெறி இன்று(01.04.2025) நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
குறித்த பயிற்சி நெறியில் கிராமிய அபிவிருத்தித் திட்டம் தயாரித்தல் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் ச.மோகனபவன் அவர்களும், பங்கேற்பு அடிப்படையிலான கிராமிய அபிவிருத்தித் திட்டம் தயாரித்தல் தொடர்பில் கண்டாவளை பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் S.P அமல்ராசா ஆகியோர் வளவாளராகக் கலந்து கொண்டிருந்தனர்.
கிளிநொச்சி மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களின் விடய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.113