வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெளுக்குளம் – நேரியகுளம் பிரதான வீதியிலுள்ள தம்பனை புளியங்குளம் குளக்கரைக்கு அண்மித்த பகுதியில் இன்று (01.04) காலை உருக்குலைந்த சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
நெளுக்குளம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற நெளுக்குளம் பொலிஸார் சடலத்தினை பார்வையிட்டனர்.
சடலத்திற்கு அருகேயுள்ள வயல் வெளியில் சேட் ஒன்றும் காணப்படுவதுடன் குறித்த சடலம் ஐந்து தொடக்கம் பத்து நாட்களுக்கு மேற்பட்டதாக இருக்கலாம் என்பதுடன் சடலம் உருகுலைந்த நிலையில் காணப்படுதினால் ஆணா பெண்ணா என அடையாளம் காண்பதில் கடின நிலைமை ஏற்பட்டுள்ளமையுடன் பொலிஸார் மேலதிக விசாரணகளை முன்னெடுத்துள்ளனர். அத்துடன் தடயவியல் பொலிஸாரும் விசாரணைகளை தொடர்கின்றனர்.
சடலத்தினை அடையாளம் காண்பதற்காகவும் பிரேத பரிசோதனைகளுக்காகவும் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.







