திருகோணமலை கந்தளாய் பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் நபரொருவர் உயிரிழந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய சந்தேக நபரை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருகோணமலையில் இருந்து கந்தளாய் பயணித்த உந்துருளியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தவருடன் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்து (31) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் தம்பலகாமம்- ஜயபுர சேர்ந்த லியானகே பேமரத்ன (58வயது) என்பவர் காயமடைந்த நிலையில் தம்பலகாமம் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திய உந்துருளி சாரதியை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.