இலஞ்சம் கொடுக்க உதவியதாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க, கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ADVERTISEMENT
இந்த வழக்கு இன்று (01) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை என்று, மன்றில் ஆஜராகியிருந்த இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளின் அறிவிப்பை ஏற்றுக்கொண்ட கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்தார்.