1826
சாமுவேல் மோரி உள் எரி பொறிக்கான காப்புரிமம் பெற்றார்.
1867
சிங்கப்பூர் பிரித்தானியக் குடியேற்ற நாடாகியது.
1873
அட்லாண்டிக் என்ற பிரித்தானியாவின் நீராவிக் கப்பல் கனடாவில் நோவா ஸ்கோசியாவில் மூழ்கியதில் 547 உயிரிழந்தனர்.
1924
இராணுவப் புரட்சியில் ஈடுபட்ட குற்றத்திற்காக கிட்லருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. ஆனாலும் ஒன்பது மாதங்களில் அவர் விடுதலையானார்.
1933
ஜேர்மனியில் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்சிகள் யூத வணிக நிறுவனங்களைப் புறக்கணிக்குமாறு ஒரு-நாள் எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தினர்.
1933
ஆங்கிலேய துடுப்பாட்ட வீரர் வால்ட்டர் அமொண்ட் 336 நியூசிலாந்துக்கு எதிரான தேர்வுப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 336 ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்தார்.
1935
இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.
1937
ஏடன் பிரித்தானியாவின் குடியேற்ற நாடானது.
1939
எஸ்ப்பானிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக இராணுவத் தலைவர் பிரான்சிஸ்கோ பிராங்கோ அறிவித்தார். கடைசி குடியரசுப் படையினர் சரணடைந்தனர்.
1941
ஈராக்கில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அப்துல்லாவின் அரசு கலைக்கப்பட்டது.
1944
இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கா தவறுதலாக சுவிட்சர்லாந்தின் சாபாசான் நகர் மீது குண்டுகளை வீசியது.
1945
இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படையினர் ஜப்பானின் ஒக்கினாவா தீவுகளில் இறங்கித் தாக்குதலை ஆரம்பித்தனர்.
1946
அலூசியன் தீவுகளில் நிகழ்ந்த 8.6 அளவு நிலநடுக்கம் காரணமாக அவாய் தீவுகளில் ஆழிப்பேரலை ஏற்பட்டு 157 பேர் உயிரிழந்தனர்.
1948
பரோயே தீவுகள் டென்மார்க்கில் இருந்து தன்னாட்சி பெற்றது.
1949
சீன உள்நாட்டுப் போர்: மூன்றாண்டுகள் சண்டையின் பின்னர், சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி தேசியவாதக் கட்சியுடன் நடத்திய பேச்சுகள் தோல்வியில் முடிந்தன.
1955
சைப்பிரசில் கிரேக்கத்துடன் இணையும் நோக்கோடு பிரித்தானிய ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி ஆரம்பமானது.
1957
இந்தியாவில் 1 நயா பைசா நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.
1958
இலங்கை இனக்கலவரம், 1958; கொழும்பு நகரில் தமிழில் எழுதப்பட்ட பெயர்ப்பலகைகள் மீது தார் பூசப்பட்டன.
1960
டிரோசு-1 என்ற செயற்கைக்கோள் முதலாவது விண்வெளியில் இருந்து முதலாவது தொலைக்காட்சிப் படிமத்தை பூமிக்கு அனுப்பியது.
1970
அமெரிக்காவில் தொலைக்காட்சி, வானொலிகளில் 1971 ஜனவரி 1 முதல் புகைத்தலுக்கான விளம்பரங்களைத் தடை செய்யும் சட்டத்தை அரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் அறிவித்தார்.
1971
வங்காளதேச விடுதலைப் போர்; வங்காளதேசத்தில் பாகிஸ்தான் இராணுவம் 1,000 பொதுமக்களைப் படு கொலை செய்தது.
1973
புலிகள் பாதுகாப்புத் திட்டம் இந்தியாவின் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் தொடங்கப்பட்டது.
1976
ஆப்பிள் நிறுவனம் ஸ்டீவ் ஜொப்ஸ், ஸ்டீவ் வாஸ்னியாக், ரொனால்டு வைன் ஆகியோரால் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது.
1979
ஈரான் 99% மக்களின் ஆதரவான வாக்களிப்பின் மூலம் ஓர் இஸ்லாமியக் குடியரசாகியது. ஷாவில் அரசு முடிவுக்கு வந்தது.
1981
சோவியத் ஒன்றியத்தில் பகலொளி சேமிப்பு நேரம் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
1997
ஏல் – பாப் வால்வெள்ளி பூமியின் சுற்றுப்பாதை வீச்சைக் கடந்தது.
1999
நூனவுட் கனடாவின் பிராந்தியமானது.
2001
போர்க்குற்றங்களுக்காகத் தேடப்பட்டுவந்த யூகொசுலாவியாவின் முன்னாள் அரசுத்தலைவர் சுலோபதான் மிலோசெவிச் காவல்துறையினரிடம் சரணடைந்தார்.
2001
நெதர்லாந்து ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதலாவது நாடானது.
2004
கூகிள் நிறுவனம் ஜிமெயில் என்ற இலவச மின்னஞ்சல் சேவையை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தியது.
2006
ஈரான் மேற்கில் லோரிஸ் டான் மாகாணத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 66 பேர் உயிரிழந்தனர்.
2006
ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தின் தீவிர ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற நிறுவனம் (SOCA) அமல்படுத்தப்பட்டது.




