யாழ்ப்பாண மருத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் உயிர்காக்கும் முதலுதவி, இருதய சுவாச மீளுயிர்ப்பு பயிற்சி மற்றும் வீதி விபத்து தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு யாழில் நேற்றையதினம் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் அரியாலை சனசமூக நிலையத்தில் குறித்த செயலமர்வு மயக்கமருந்து நிபுணர் வைத்தியர் எஸ்.பவானியின் நெறிப்படுத்தலில் வைத்தியர்களால் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது உயிர்காக்கும் முதலுதவி மற்றும் இருதய சுவாச மீளுயிர்ப்பு பயிற்சி தொடர்பில் செயன்முறை ரீதியாக பயிற்றுவிக்கப்பட்டது.
வீதி விபத்துக்கள் தடுப்பு முறைகள் பற்றிய தெளிவுபடுத்தல்கள் குழந்தைகள் மற்றும் சிறுவர் சத்திரசிகிச்சை நிபுணரான வைத்தியர் பா. சயந்தனால் வழங்கப்பட்டது.
பொது வைத்திய நிபுணரும் யாழ்ப்பாண மருத்துவ சங்கத்தின் செயலாளருமான வைத்தியர் ஆர்.சிவரஞ்சனி பயிற்சியினை நிறைவுசெய்தவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
கருத்தரங்கில் கலந்துகொண்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுக்கும சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.








