தந்தை செல்வாவின் பிறந்த நாளை முன்னிட்டு தந்தை செல்வா நற்பணி மன்றத்தினால் பல்துறை ஆளுமைகளுக்கு தந்தை செல்வா விருது இன்று மாலை வழங்கி வைக்கப்பட்டது.
யாழ். வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் தலைவர் விசாகப்பெருமாள் உமாபதி தலைமையில் குறித்த நிகழ்வு ஆரம்பமானது. இதன் பொழுது வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பல்துறை சார்ந்த ஆளுமைகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கபட்டது.
தொடர்ந்து தந்தை செல்வா, நற்பணி மன்றத்தினால் பொருண்மியம் நலிந்தோருக்கு மூக்கு கண்ணாடிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் பொழுது தந்தை செல்வா நற்பணி மன்றத்தினர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.



