யாழில் துவிச்சக்கர வண்டியில் சென்ற வயோதிபப் பெண்ணொருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – அரசடி வீதி பகுதியை சேர்ந்த லோ.உசேந்திரா (வயது 70) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
துவிச்சக்கர வண்டியில் பயணித்த குறித்த பெண் நேற்றையதினம் தட்டாதரு சந்தியூடாக அரசடி வீதிக்கு திரும்ப முயற்சித்துள்ளார். இதன்போது கே.கே.எஸ் வீதியால் வந்த மோட்டார் சைக்கிள் அவர்மீது மோதியதில் படுகாயமடைந்தார்.
இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.