தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் யாழ் மாவட்ட பொறியியல்துறை சார்ந்தவர்ளுக்கான விசேட கலந்துரையாடல் யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் தலைவர் லலித் தலைமையில் இடம்பெற்றது.
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம், வலு சக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ,டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன ,துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித் கொடி துவக்கு , பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் யாழ் மாவட்ட பொறியியலாளர்கள் , பொறியியல் துறைசார் வல்லுனர்கள், பேராசிரியர்கள் , கல்வியலாளார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வடமாகாணத்தில் முன்னெடுக்கபடவுள்ள அபிவிருத்தி திட்டங்களில் வடமாகாண துறைசார் புத்திஜீவிகளை உள்ளீர்க்கும் முகமாகவும் அவர்களது கருத்தினை முன்னெடுக்கும் முகமாக குறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.





