யாழில் வீதியில் சென்றுகொண்டிருந்த குடும்பப் பெண் ஒருவர் மயங்கி கீழே விழுந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதன்போது புங்குடுதீவு, 14ஆம் வட்டாரத்தை சேர்ந்த சி.வசந்தா (வயது 68) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண் நேற்றையதினம் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். இதன்போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இந்நிலையில் அவர் புங்குடுதீவு வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போது நான் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலயில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.