யாழ் வடமராட்சி கிழக்கு சர்வதேச மகளிர் தினம் நேற்று(28) காலை 9:30மணியளவில் பிரதேச செயலக கலாச்சார மத்திய நிலயத்தில் ஆரம்பமானது.
இந் நிகழ்வானது வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் திரு.குமாரசாமி பிரபாகரமூர்த்தி அவர்களின் தலைமையில் ஆரம்பமாகி நிகழ்வின் பிரதம விருந்தினராக திருமதி. வினோதா அச்சுதன் உளநல வைத்திய அதிகாரி சாவகச்சேரி அவர்களும் சிறப்பு விருந்தினராக செல்வி யோகராஜா திவ்யா வைத்திய அதிகாரி பிரதேச வைத்தியசாலை முள்ளியான் அவர்களும் மற்றும் திரு.கணபதிப்பிள்ள ஐங்கரன் சித்த மருத்துவ மருந்தகம் பருத்தித்துறை அவர்களும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் மற்றும் கௌரவிப்பு நிகழ்வும் மற்றும் மகளிருக்கான சுய தொழில் ஊக்குவிப்பு கடன்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மகளிர் அமைப்பு பிரதி நிதிகள் இளைஞர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



